மருக்கள் அனைவரும் சந்தித்து வரும் பொதுவான பிரச்சினையாக உள்ளது.

கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

இருப்பினும் இந்த மருக்களை ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் போக்கலாம்.

பூண்டு

பூண்டை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி பின்னர் அதை மருக்கள் மீது தேய்க்க வேண்டும். அல்லது பூண்டை பேஸ்ட் செய்து மருக்கள் மீது தடவலாம். இப்படி செய்தால், சில நாட்களில் மருக்கள் உதிர்ந்து விடும். உடனடி பலன் கிடைக்க பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியை கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை எடுத்து காட்டனில் நனைத்து மருக்கள் மீது தடவலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் மருக்கள் உதிர்ந்து விடும்.

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 3 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

அன்னாசி பழச்சாறு

அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.