ஒமிக்ரோன் மாறுபாடு தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாளொன்றுக்கு அதிகளவிலான நோயாளிகள் அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திங்களன்று 4 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுநோயாளிகள் இருப்பதாக அமெரிக்க நோய் மற்றும் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்மஸ் காலத்தில் கிடைத்த தாமதமான அறிக்கை காரணமாக எண்ணிக்கை அதிகமாக ஆக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், ஐரோப்பாவில் நாளொன்றுக்கு மிக அதிகளவிலான நோயாளிகள் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாயக்கிழமை ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 807 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதேநேரம் ஜனவரி தொடக்கத்தில் பிரான்ஸில் நாளாந்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் நோயாளிகள் அடையாளம் காணக்கூடும் என சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.