அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மருந்துகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (29) அம்பலாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபர் பதுக்கி வைத்திருந்த மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.