அன்னை மடியில் தலை சாய்ந்து

அன்போடு பேசி கொஞ்சி விளையாடி

அவள் ஊட்டும் ஒருவாய்ச் சோறுக்கு

அமிர்தமே ஈடில்லை என்பதை உணர்ந்தேன்

கற்றவன் கால்கள் தடுமாறிச் சென்றாலும்

பெற்றவள் எனக்கு வேலியாக இருப்பதால்

வற்றாத அன்பில் வாழ்வை நனைத்து

கற்றின் அவளிடம் தாய்மையின் கல்வி!!

மித்ரன்

சுரேஷ் குமார் (மித்ரன்)