திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேகநபரை நேற்று (சனிக்கிழமை) மாலை முன்னிலைப்படுத்தியபோதே, அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்று முன்தினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களான நவீனன், துசார, பிரபுதன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர் தனது வாகனத்தில் தப்பித்து மொனராகல – எத்திமல பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்து அம்பாறை மாவட்டத்துக்கு அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது