அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைதுப்பாக்கி 16 இலச்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை (14) மாலை காவற்துறையினருடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துசெய்துள்ளதாக காரைதீவு காவற்துறையினர் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று காலை காரைதீவு விபுலானந்த வித்தியாலய வீதியிலுள்ள சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கி விற்கும் ஒருவரின் வீட்டை இராணுவ புலனாய்வு பிரிவினர் காவற்துறையினர் மற்றும் விசேட அதிரப்படையினருடன் இணைந்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட போது மைக்கிரே ரக கைதுப்பாக்கி ஒன்றும் இரண்டு மகசீன் 16 ரவைகளுடன் 44 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஆரையம்பதியிலுள்ள சட்டவிரோத துப்பாகி வியாபாரி ஒருவர் மூலம் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் ஒருவரிடமிருந்து 5 இலச்சம் ரூபாவுக்கு வாங்கியதாகவும் அதனை 16 இலச்சம் ரூபாவுக்கு விற்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக  விசேட அதிரடிப்படையினரின் ஆரம்பகட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது .

இதில் கைது செய்யப்பட்டவரை  காவற்துறையினர் விசாணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர் 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காரைதீவு காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.