விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தவறான தீர்மானத்தினால் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பருவ காலத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பது மிகவும் அவசியம் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விவசாயத்துறை தொடர்பில் கடந்த காலத் தவறுகளை மீண்டும் மீண்டும் பேசுவதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன். நாம் எடுத்த தவறான முடிவால் இன்று நாட்டில் உணவுத் தட்டுப்பாடும், விவசாய நிலங்கள் இழப்பும், மக்களுக்கு இழப்பீடும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.