அரிய வகை சிலந்திகள், கரப்பான் பூச்சிகள், தேள்களை கொலம்பியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற நிலையில் அவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

210 பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு இருந்த 232 டிராண்டுலா வகை சிலந்திகள், சிலந்தி முட்டைகள், தேள்கள், 67 கரப்பான் பூச்சிகளை இருவர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்துவதற்கு முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரண்டு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து அரியவகை ஊர்வன ஜீவராசிகளைப் பொலிஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன் இருவரையும் கைது செய்துள்ளனர்

10 ஆயிரத்திற்கு அதிகமான பன்முகத்தன்மை கொண்ட உயிரினங்களை உடைய கொலம்பியாவில் ஜீவராசிகள் கடத்தல் பெரும் தொழிலாக உள்ளது.