கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புரட்சி மூலம் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு ஆங் சான் சூகி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, ஆங் சான் சூகியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஊழல், உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறுதல், பொது அமைதியின்மையை தூண்டுதல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

11 குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.