மூளைச் சாவை விட கொடியது
ஆன்மாவின் சாவு!

நடைபிணங்கள் ஒன்றுகூடி
மன்றங்கள் அமைத்திருக்கின்றன!

சாவடைந்த மூளையை சலவை செய்து என்னபயன்?

துருப்பிடித்த இதயங்களில்
துடிப்பிருந்து ஏது வினை?

கடவுளரை வாழ்விக்க
காடைத்தன தெய்வீகங்கள்!

சரத்துக்களையும் சாத்திரங்களையும் உயிர்ப்பிப்பதற்காக
பலியிடப்படும் மனிதங்கள்!

ஒற்றைப் புள்ளியில் மனிதங்காணாது
ஓராயிரம் திசைகளில்
ஆன்மீக அதர்மங்கள்
விரிந்து கிடக்கிறது!

மூளைச் சலவையைவிட கொடியது
ஆன்மாவின் சாவு
நடைபிணங்கள் தலைமைதாங்குகின்றன
மனிட வளர்சிக்காய்!

…சூரியநிலா…