யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுவதாக இருந்தால் இ.போ.ச வடக்கு பிராந்திய முகாமையாளர் ஆளுநருக்கு வழங்கிய அறிக்கையில்,

? புதிய பேருந்து நிலையம் முழுமையாக இலங்கை போக்குவரத்து சபையிடம் கையளிக்க வேண்டும்.

? புதிய பேருந்து நிலையத்தில் திறமையாக மாகாணங்களுக்கிடையிலான சேவையை நடாத்தும் பொருட்டு எமக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தரவேண்டும்.

? மாகாணங்களுக்கு இடையேயான சேவைகள் மட்டும் நடத்துவதற்கு தயாராக உள்ளோம்.

? தற்போது பாவிக்கப்படும் எமது மத்திய பேருந்து நிலையத்தில் இ.போ.ச. சேவைகளுக்கு தனியாராலும் ஏனைய தரப்பினராலும் இடையூறு ஏற்படாது உறுதிப்படுத்தல்

?புதிய பஸ் நிலைய முகாமைத்துவம் மற்றும் இ.போ.ச. வினரின் தனித்துவமான சேவையை நடாத்தும் முழுமையான அதிகாரம் வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபையிடம் இருத்தல் வேண்டும் என்பதை எழுத்து மூலமாக உறுதிப்படுத்தி தரப்பட வேண்டும். என கோரப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான கோரிக்கைகள் வழங்கப்பட்ட போதும் இன்றைய ஆளுநருடனான சந்திப்பு காரசரமான முறையில் முடிவின்றி முடிந்துள்ளது.