ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் முக்கவசம் அணிவைத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆறு பாடசாலை ஊழியர் சங்கங்கள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் நடவடிக்கை எடுக்காதுவிடின் பரீட்சைகள் நடத்துவதற்கு தாமதமாகலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் கிறிஸ்மஸ் விடுமுறைக்குப் பின்னர் இங்கிலாந்து முழுவதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

புதிய வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர்கள் முக்கவசம் அணிய வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.