இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும் நிலநடுக்கம் தொடர்பான நிலைமையினை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்தப் பணியகம் கூறியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவு கோளில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 11:20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.