சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் தென்னிந்திய உணவு இட்லி மற்றும் தோசை.

இதற்கு என்ன சட்னி அரைப்பது என்பதே பலரது குழப்பமாக இருக்கும், இந்த பதிவில் காரசாரமான மிளகாய் சட்னி அரைப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

சிறிய வெங்காயம் – 30 (நறுக்கியது)
பூண்டு பல் – 15 (நறுக்கியது)
மிளகாய் – 5
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்ததும், நல்லெண்ணெய் சேர்க்கவும், எண்ணெய் காய்ந்த பின்னர் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

இதனுடன் 5 மிளகாய்களை சேர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதில் 15 பூண்டு பல் சேர்த்து வதக்கிய பின்னர், கொத்தமல்லி சேர்க்கவும், நன்றாக ஆறிய பின்னர் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொண்டால் சுவையான மிளகாய் சட்னி தயார்