சிலிண்டர்களில் இருந்து எரிவாயு கசிந்த இரண்டு சம்பவங்கள் இன்றும் பதிவாகியுள்ளன.

பொல்கச்ஓவிட்ட மற்றும் ஜா-எல பிரதேசங்களில் இவ்வாறு எரிவாயு கசிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொல்கச்ஓவிட்ட , சியம்பலாகொட ரணவிரு பிறமசிறி மாவத்தையில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் நேற்று தாம் கொள்வனவு செய்த எரிவாயு சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவதாக தெரிவித்துள்ளார்.

சிலிண்டரின் வால்வில் இருந்து எரிவாயு கசிந்ததை வீட்டு உரிமையாளர் தனது தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சிலிண்டரை வீட்டில் இருந்து வெளியே எடுத்து வந்து தோட்டத்தில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் வைத்துவிட்டு எரிவாயு சிலிண்டர் முகவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதேவேளை, ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்று நேற்று இரவு எரிவாயு கசிவு காரணமாக வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக குறித்த வீட்டார் தெரிவித்துள்ளனர்.