மின் விநியோகம் தொடர்பாக மின்சக்தி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (10) முதல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, கடந்த இரு தினங்களில் அமுல்படுத்தப்பட்ட தலா ஒரு மணித்தியால மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.