ஆதிமனிதன் ஆதாமும்
நீதிமனிதன் ராமனும்
அறிந்திரா
பாலமது.!

மனிதனின் வயது மூன்று லட்சம்
மணல்திட்டின் வயது சில மில்லியன்.!

ஈழத்தில் பாதி
இந்தியாவில் மீதியாய்
முப்பது மைலில்
மூழ்கியும் மிதந்தும்
இயற்கையின் வினோதமாய்!

அயலவர் கண்களில்
இது இப்போது
அரசியற் பாலம்!

ஆசிய வல்லரசுகளின்
ஆதிக்க பாதங்கள்
பூசையும் புரிதலுக்கான தரிசிப்புக்களுமாய்
நீளுகின்றன…

குரங்குகள் அப்பம் பிரிப்பதாய்
அகப்பட்டுக்கிடக்குமோ இலங்கை?

    ...சூரியநிலா...