பாகிஸ்தானின் சியல்கோட்டில் (Sialkot) கடந்த 3 ஆம் திகதி தாக்குதல் நடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் உடற்பாகங்கள் இன்று (06) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அன்னாரின் உடற்பாகங்கள் 5.15 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளன.

? பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை தகவல்

அவரது தலையில் பல தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றன மூளைவரை அது சென்றதால் மரணம் நிகழ்ந்தது என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை கும்பல் அவரது கைகால்களை முற்றாக அடித்துநொருக்கிவிட்டது .அவரது திசுக்களில் 99 வீதமானவை எரிகாயம் மற்றும் காயங்களால் சேதமாகிவிட்டன காலின் அடிப்பகுதி தவிர உடலின் அனைத்து பாகங்களும் எரிந்துவிட்டன என பிரதேபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

?இலங்கையிலும் பிரேத பரிசோதனை

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 186 விமானத்தில் சடலம் கொண்டு வரப்பட்ட அவரது சடலம்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என்று பிரியந்த குமார தியவதனவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.