இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.

4.3 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.