இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.