பிரபல SpaceX நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink ஊடாக இலங்கைக்கான இணைய அணுகலைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.

இலங்கையில் Starlink இணையச் சேவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக SpaceX நிறுவனத்துடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் இணைய சேவைகளை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குமுறை அம்சங்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் முதல் சுற்று கலந்துரையாடலில் கவனம் செலுத்தியதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்