இலஞ்சம் பெற்ற 36 பேர் இதுவரையிலான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சரத்துகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் இதுதொடர்பில் 70 முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 33 முற்றுகைகளில் இருந்து 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆணைக்குழுவின் செயலாளர் அப்ஷரா கல்போரா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 தலைமை காவல்துறை பரிசோதகர்கள் அடங்கலாக 5 காவல்துறையினரும் அடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், 2 நகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறினார்.