யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்ற மாணவன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் கடந்த 13. 10. 2020 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா மரணமடைந்த மாணவன் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்தார்.