யாழ்ப்பாணம் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு, அழகுபடுத்தும் பணிகள் நிறைவடைந்தது அண்மையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
பெருமளவான மக்கள் தினந்தோறும் அங்கு சென்று இளைப்பாறி வருகின்றனர்.
சிலகாலத்திலேயே ஆரியகுளம் மக்கள் மனதில் இடம்பிடித்த நிலையில்,
அடை மழை நேரம் இளைஞர் ஒருவர், அங்கு சிறுநீர் கழித்த புகைப்படம் மக்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்துள்ளது.
சமூகப்பொறுப்புணர்வற்று மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடத்தில் இவ்வாறு அநாகரிகமாக செயற்பட்டமையை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர்.