இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடையே, பல முக்கிய விடயங்களை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நாஃப்டாலி பென்னட், ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஸயீது அல்-நாஹ்யானை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்தையின் போது, வர்த்தகம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

மேலும், பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பு, கூட்டு முயற்சி, பிராந்தியத்தில் நிலைத்தன்மை, பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்கு பங்களிப்பதை அதிகப்படுத்துதல் ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டுக்கும், உலக வல்லரசுகளுக்கும் இடையே ஆஸ்திரியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் பின்னணியில் இஸ்ரேல் பிரதமரின் இந்த விஜயம் அமைந்துள்ளது