நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லையென விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதால், அடுத்த வருடத்தில் பெரும்பாலும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், சிறுபோகத்திற்காக 5 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் செய்கையில் கிடைக்கப்பெற்ற விளைச்சல் 6 மாத காலத்திற்கு போதுமானதாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பெரும்போகத்தில் தற்போது 7 இலட்சத்திற்கும் அதிக நிலப்பரப்பில் நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் விளைச்சல் உரத்தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பினும், நாட்டின் நுகர்வுக்கு போதுமானதாக உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.