உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச திறைசேரிக்கு வேண்டிய வரிகளை அதிகரிப்பதற்காக இவ்வாறு தீர்மானித்துள்ளதாக கலால் திணைக்களத்தின் பேச்சாளர், கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள முழு சந்தையிலும் விற்கப்படும் அனைத்து மதுபான போத்தல்களுக்கும் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.