ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, 3 இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மீது பச்சை மட்டையில் முள்ளுக்கம்பி சுற்றி இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து, முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் போராட்டத்தையடுத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றிருந்து மாவீரர் தின செய்திகளைச் சேகரிப்பதற்காக, சம்பவ இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீது, இராணுவத்தினர் பச்சை மட்டை மற்றும் முள்ளுக்கம்பி கொண்டும் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனையடுத்தே குறித்த எதிர்ப்புப் போராட்டம், சமயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பில், முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இதனையடுத்தே 3 இராணுவத்தினரை, முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.