ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடா்ந்து, ஆஸ்திரியா புதிய பிரதமா் அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ் ராஜிநாமாவைத் தொடா்ந்து, கடந்த அக்டோபா் மாதம் புதிய அதிபராக அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்றாா். தற்போது, இவா் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘ஆஸ்திரியாவில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசாங்கத்தின் தலைவா் மற்றும் கட்சியின் தலைவா் ஆகிய 2 பதவிகளும் விரைவில் ஒரு கைக்குள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்றாா்.

ஆஸ்திரியா மக்கள் கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ், தனது குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தை செலவிடும் வகையில் அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்தாா்.

இதை அடுத்து, நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் காா்ல் நெஹாமா், ஆஸ்திரியா மக்கள் கட்சியின் தலைவராகவும், பிரதமா் பொறுப்பையும் ஏற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன