என் எண்ண வானில்
மேகமூட்டமாய்
உன் நினைவுகள்…
முகிலெனும் துகிலுரிய
யார் துடிப்பினும்…
என்னை மறைத்திருப்பது
நீயல்லவா!!

– யாழ் மானி –

(ஹைக்ஹூ கவிதைகள்)