எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி அங்கத்தவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் கினிகத்தேனை காவற்துறை பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் நேற்று இரவு இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கம் எரிபொருளின் விலையினை உடன் குறைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியே குறித்த கையில் தீப்பந்தம் ஏந்திய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டருந்தனர்.