எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விநியோகத்தின் போது நட்டம் ஏற்படுகின்றமையினால் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கனியவள கூட்டுத்தாபனம், வலுசக்தி அமைச்சரிடம் அண்மையில் கோரியிருந்தது.

இதனையடுத்து அமைச்சர் இது தொடர்பில் அமைச்சரவையில் வெளிப்படுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு நிதியமைச்சின் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

எவ்வாறாயினும் கனிய வள கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 22 ரூபாவும் ஒரு லீற்றர் டீசலுக்கு 31 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.