லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன், ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில், லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய கப்பலொன்றும் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுவரையில், நாட்டை வந்தடைந்துள்ள மூன்று எரிவாயு கப்பல்களிலும் கொண்டுவரப்பட்ட எரிவாயு, உரிய தரநிலைக்கு அமைய உள்ளமையால், அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்களும், லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய ஒரு கப்பலும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இந்த மாத இறுதிவரையில், நாட்டுக்கு அவசியமான எரிவாயு உள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்