சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த நவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதியினால் 8 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

குறித்த நிபுணர் குழுவினால் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவான இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது