ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆலோசனைக்கமைய கட்சியின் கொள்கைகளை வகுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதானமான 4 துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒரே சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

இளைஞர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, உள்ளுராட்சி தொகுதிகளில் மக்கள் சந்திப்புக்களை நடத்துதல் மற்றும் ஆரம்ப மட்டத்திலுள்ள உறுப்பினர்களின் வேலைத்திட்டம் என்பவற்றை ஐக்கிய தேசிய கட்சி ஒரே நேரத்தில் முன்னெடுக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆலோசனைக்கமைய கட்சியின் கொள்கைகளை வகுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. அத்தோடு முழு நேர அரசியல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஆரம்ப மட்ட அரசியல் செயற்பாடுகள் ஆரம்பமானதுடன், தொகுதி மட்டத்தில் பொறுப்புக்களை ஒப்படைக்கும் புதிய அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.க. பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் தலைமையில் புதிய ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.