ஒமிக்ரோன் அச்சத்தால் பணக்கார நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகளவில் உருமாற்ற வகை ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

ஒமிக்ரோன் சமூக பரவலாக மாறி, அலையாக உருவெடுத்தால் கோவிட் தடுப்பூசியின் தேவைகள் அதிகரிக்கும். இதனால், ஒமிக்ரோன் வைரஸ் அச்சத்தால் பணக்கார நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும், கோவிட் தடுப்பூசிகள் விநியோகிப்பதில் சிக்கலாகிவிடும் எனவும் கவலை தெரிவித்துள்ளது