இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 580  ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிலை தொடருமானால் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.