பிரான்ஸில் ஒரு நாளைக்கு சுமார் 100,000 புதிய நோயாளர்கள் பதிவாக்கக்கூடும் என சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் எச்சரித்துள்ளார்,

ஜனவரி தொடக்கத்தில் பிரான்ஸில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என அவர் கூறினார்.

இருப்பினும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடவில்லை என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்க பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.