இலங்கைக்கு மேலும் 842,400 டோஸ் பைஸர் தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தொகுதி தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்தன.

இலங்கையின் சுகாதார அமைச்சு, UNICEF மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து, கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பான உலகைக் கட்டியெழுப்ப தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அமெரிக்க பொறுப்பாளர் மார்ட்டின் கெல்லி கூறியுள்ளார்.