வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்றிரவு காரில் வந்த குழுவொன்று வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ‘கெசல்வத்தை பவாஸ்’ என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலை சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.