பாலை பொதியிடுவதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்காக அரசாங்கத்தினால் 5 சதவீதம் வரி அறவிடப்படுவதால் உள்ளூர் பால் உற்பத்தி கைத்தொழிலில் ஈடுபடுவோர் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வரியை நீக்குவதற்கு நிதி அமைச்சர் இணங்கியுள்ளதாக கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும், சந்தையில் உள்ளூர் பால் மா பொதி ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், ஒரு லீற்றர் பால் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு லீற்றர் பாலின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தானும் ஏற்றுக்கொள்வதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.