தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் சமந்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

தற்போது அவர் புஷ்பா படத்திற்காக நடனமாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் பயங்கர வைரலாகி விட்டது, முன்னணி நடிகையே குத்தாட்டம் போட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

எனினும் இந்த பாடலின் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக இருப்பதாக ஆண்கள் சங்கம் எதிர்ப்பும் தெரிவித்தது.

இந்நிலையில் சமந்தாவின் நடனத்தை விமர்சித்த ரசிகர் ஒருவர், ‘‘விவாகரத்து செய்து வாழ்க்கையை கெடுத்து கொண்ட குத்தாட்ட நடிகை சமந்தா, ஜென்டில்மேனிடம் இருந்து ரூ.50 கோடியை வரியில்லாமல் திருடிக்கொண்டார்” என கூறியுள்ளார்.

இதனை பார்த்த சமந்தா, “கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என பதிலளித்துள்ளார், இதனை பார்த்த ரசிகரோ, அந்த பதிவையே நீக்கிவிட்டாராம்.

ரசிகரின் கமெண்டிற்கு கோபப்படாமல் மிகவும் கனிவாக பதிலளித்த சமந்தாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன