டிசம்பர் கடைசி வாரத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 52 வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 2,365 ஆகும், அதில் 2,461 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 5,383 கடும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.