டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஜிபி முத்து. இவரைப்பற்றி சொல்லிதான் தெரியவேண்டும் என்பது இல்லை அந்த அளவிற்கு தற்போது தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டு இருக்கிறார்.

இவர் பேசும் ஸ்டைலும், நகைச்சுவையும் பலரையும் ரசிக்கவைக்கும், அதுவும் அடேய் செத்த பயலே நார பயலே என்ற டயலாக் தான் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது.

தற்போது இவர் படங்களில் கூட சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அவ்வளவு ஏன் காமெடி நடிகர் சதீஷ், சன்னி லியோன் இணைந்து நடித்துவரும் படத்தில் கூட இவர் நடித்துகொண்டிருக்கிறார்.

எல்லோரையும் சிரிக்க வைக்கும் குணம் உடைய இவர் தற்போது கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த வீடியோவில், அனைவரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன் கைவிட்டு விட்டான். உண்மையாகவே ஆண்டவன் என ஒருவன் இல்லை.

என்னோட உயிர் நண்பன் என்னை விட்டு போய் விட்டான் என தன்னுடைய நண்பரின் மறைவிற்கு கண்கலங்கி அழுதுள்ளார் ஜி பி முத்து.

மேலும், ஜாதி மதம் பார்க்காமல் பழகினோம் ஆனால் இன்னைக்கு என் நண்பன் என்னோட இல்லை என நண்பனின் மறைவு குறித்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது

https://www.instagram.com/tv/CXNpwCdjVwx/?utm_medium=copy_link