ஹம்பாந்தோட்டை – சூரியவௌ சர்வதேச கிரிக்கெட் அரங்கின் ஊழியர்கள் இருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களது சடலங்கள் விளையாட்டரங்கின் பின்புறமாக உள்ள வீதியிலிருந்து இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் நேற்றிரவு சூரியவௌ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.