உடன் அமுலுக்கு வரும்வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருமே கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

காரைநகர் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட காரணத்தினால் அவர்களை கட்சியிலிருந்து விலக்க முடிவு எடுக்கப்பட்டது என க.சுகாஷ் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.