பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் அனைத்து சாரதிகளும் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.