கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, குறிஞ்சாக்கேணியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் இதுவரையில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.