கிளிநொச்சியில் அம்பாள்குளத்தில் லண்டனிலிருந்து திரும்பிய பெண்ணைக் காணவில்லை என்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸார் நடத்திய விசாணையில் குறித்த பெண் கந்தபுரம் முதலைப் பாலத்தில் உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வீட்டில் இரத்தக்கறையும் உள்ளதால் கொலையா எனச் சந்தேகம் நிலவும் நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவர் கடந்த 3 வருடங்களின் முன் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து வீட்டு உரிமையாளரால் நேற்று மாலை 6.00 மணியவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.