பூமிதாய்க்கு சேவையாற்ற குஜராத் விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காணொலி மூலம் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வட குஜராத்தை இயற்கை விவசாயத்தை நோக்கிக் கொண்டு செல்வோம் என மா உமியாவின் முன்பாக உறுதியேற்குமாறு விவசாயிகளிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

விளைநிலத்தின் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கி, படிப்படியாக இயற்கை விவசாயத்தை கடைப்பிடியுங்கள்.

இது செலவைக் குறைப்பது மட்டுமன்றி மாற்றத்தையும் பூமித்தாய்க்கு புதிய ஆன்மாவையும் கொண்டுவரும். இதன் வாயிலாக வருங்கால சந்ததிக்கான நற்பணிகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.